சும்மா கெத்தா சீறி வரும் காளைகளை பிடிக்க முடியாமல் திணறிய வீரர்கள்...! திருச்சி ஜல்லிக்கட்டில் பரபரப்பு

திருச்சி மாவட்டம், பள்ளப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், துள்ளி வரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் பிடிக்க போராடி வருகின்றனர்.

சும்மா கெத்தா சீறி வரும் காளைகளை பிடிக்க முடியாமல் திணறிய  வீரர்கள்...! திருச்சி ஜல்லிக்கட்டில் பரபரப்பு

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில், ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் மகேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.

சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்க, 350  மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு வருகின்றனர். மொத்தம் 750 காளைகள் அவிழ்த்து விடப்படவுள்ள நிலையில், போட்டியினை காண உள்ளூர் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், கட்டில், அண்டா, குடம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. போட்டியின் போது மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் என 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக 11 காளைகளை அடக்கிய வீரர் சந்துரு, கண்ணில் காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பப்பட்டுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், கால்நடை மற்றும் சுகாதாரத் துறையினரும் முகாமிட்டுள்ளனர்.