திமுக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது....உதயநிதி ஸ்டாலின்.!

சசிகலா காலில் விழுந்து ஆட்சி அமைக்கவில்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு திமுக ஆட்சி அமைத்துள்ளோம் என்று  எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு ,  உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது....உதயநிதி ஸ்டாலின்.!

பொள்ளாச்சி நகர மன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில்,

எடப்பாடி பழனிசாமி போல பஜகவிற்கு அடிமையாக இருந்தும் கூவத்தூர் சென்று சசிகலா காலில் விழுந்து முதல்வராக வரவில்லை என்றும் நாங்கள் மக்களை சந்தித்து மக்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளோம் என்றார்.

எடப்பாடியின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாத என கூறிய அவர்,   திமுக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கோவை மாவட்டம் அதிமுக கோட்டையாக உள்ளதாக கூறி வரும் அதிமுகவினருக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்