இங்க பார்ர்ரா... எச்.ராஜா ஊர்ல  தக்காளி ஒரு கிலோ ரூ.80 தானாமே...

காரைக்குடியில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.80 என்று, தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.

இங்க பார்ர்ரா... எச்.ராஜா ஊர்ல  தக்காளி ஒரு கிலோ ரூ.80 தானாமே...

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்கிய காலத்தில் சில்லறை விற்பனைக் கடைகளில் 20 முதல் 25 ரூபாய்க்கும் சிறு சந்தைகளில் 10 ரூபாய்க்கும் தக்காளி விற்பனையாகிவந்தது. ஆனால், மழைக் காலம் துவங்கியதும் தக்காளியின் விலை மெல்ல மெல்ல அதிகரிக்கத் துவங்கி, தற்போது கோயம்பேடு மொத்த விற்பனைக் கடைகளிலேயே கிலோ 100 ரூபாய்க்கு விற்கத் துவங்கியுள்ளது. இதனால், சில்லறை விற்பனைக் கடைகளில் 140 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகிறது.

"கோயம்பேட்டிற்கு பொதுவாக ஒரு நாளைக்கு 80 லாரி தக்காளி வரும். ஆனால், இப்போது 30 லாரிகளே வருகின்றன. இதனால் மொத்த விற்பனைக் கடைகளிலேயே 100 ரூபாய் முதல் 110 ரூபாய்வரை தக்காளி விற்பனையாகிறது. மகாராஷ்டிராவிலிருந்து வரத்து தொடர்ந்தால் விலை குறைய வாய்ப்பிருக்கும் இல்லாவிட்டால் இதே விலை நீடிக்கும் என்று கூறப்பட்டது. 

சமையலுக்கு தினமும் தேவைப்படும் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்ததால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே, தக்காளியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவர்கள் அரசுக்கு வலியுறுத்தினர். இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி விலை ரூ.30 குறைந்தது.

முதல் ரக தக்காளி கிலோவுக்கு ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.30 குறைந்து, கிலோவுக்கு ரூ.80க்கு விற்பனையாகிறது. இதேபோல், 2-ம் ரக தக்காளி ரூ.100ல் இருந்து ரூ.30 குறைந்து, ரூ.70க்கு விற்பனையாகிறது.. தக்காளியின் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளளனர். தக்காளி தக்காளி விலை சற்று குறைந்துள்ளதால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த வகையில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கும் மகிழ்ச்சிதான் போலும். தக்காளி போட்டோவை போட்டு, ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். எச்.ராஜா. அதில், "இன்று காரைக்குடியில் தக்காளி 1 கிலோ ₹80 தான்" என்று தெரிவித்துள்ளார்.