ஈரோடு இடைத்தேர்தலில் விவிபேட் எந்திரம் - தலைமை தேர்தல் அதிகாரி

ஈரோடு இடைத்தேர்தலில் விவிபேட் எந்திரம் - தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலில் முழு அளவில் விவிபேட் எந்திரம் (வாக்களித்ததை உறுதி செய்யும் எந்திரம்) பயன்படுத்தப்படும். தற்போது வாக்குப்பதிவு எந்திரத்தை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடைத் தேர்தலுக்காக 3 பறக்கும்படை மற்றும் 3 கண்காணிப்புக் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல வருமான வரி அதிகாரிகளைக் கொண்ட குழுவும் அமைக்கப்படும்.

மேலும் படிக்க | புதுக்கோட்டை வேங்கைவயல் பிரச்சனை - திமுக , ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

அந்தத் தொகுதியில் உள்ளவர்கள் யாரும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம். வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்புவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ளவர்களின் பெயர் பட்டியலிடப்படும்.

அந்தப் பட்டியல் தனியாக வாக்காளர் துணைப்பட்டியலாக வெளியிடப்படும். பின்னர் ஏற்கனவே உள்ள இறுதி வாக்காளர் பட்டியலுடன் அது இணைக்கப்படும். துணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய வாக்காளர்களும் இந்த இடைத் தேர்தலில் வாக்களிக்கலாம்.

மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியே நிற்கும் - கே.எஸ். அழகிரி

இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி இந்த இடைத்தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ.40 லட்சம் வரை செலவழிக்கலாம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அங்கு யாரும் ரொக்கமாக அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே கையில் எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.