சென்னை கோயம்பேட்டில் குறைந்த ஆப்பிள் வரத்து.. அதிகரித்த விலை.. தொடர் பண்டிகைகள்..!

30 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.3,500-க்கு விற்பனை..!

சென்னை கோயம்பேட்டில் குறைந்த ஆப்பிள் வரத்து.. அதிகரித்த விலை.. தொடர் பண்டிகைகள்..!

தொடர் பண்டிகைகள்:

தமிழ்நாடு முழுவதும் நவராத்திரி, தசரா, விஜயதசமி, சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து விழாக்கள் கொண்டாடப்படவுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலும், கோயில்களிலும் இந்த நாட்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்துவது வழக்கம். 

விலை அதிகரிப்பது வழக்கம்:

பூஜை நாட்களில் பூக்களின் விலையும், பழங்களின் விலையும் கணிசமாக அதிகரிப்பது உண்டு. சாதாரணமாக விஷேச நாட்களில் இவற்றின் விலை அதிகரிப்பது தாண்டி தற்போது வரத்து குறைவால் மேலும் அதிகரிப்பது குடும்பவாசிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்பிள் வரத்து குறைவு:

அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஆப்பிளின் வரத்து குறைந்திருப்பதால், அதன் விலை அதிகரித்திருக்கிறது. வழக்கம்போல் வரக்கூடிய வரக்கூடிய ரூ.500கோடி மதிப்புடைய ஆப்பிள் பெட்டிகள் வரவில்லை எனக் கூறப்படுகிறது. 

பொதுமக்கள் கலக்கம்:

இதன் காரணமாக இமாச்சலப் பிரதேச ஆப்பிள் பெட்டிகள் 30 கிலோ ரூ.3,500-ஆகவும், சிம்லா ஆப்பிள் பெட்டிகள் 30 கிலோ ரூ.3,080ஆகவும் விலை அதிகரித்துள்ளது. தொடர்ந்து வரும் பண்டிகளில் முக்கியமாக வைக்கப்படும் ஆப்பிள் பழத்தின் விலை அதிகரித்து இருப்பது வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.