புதிதாக பரவிவரும் "கொரோனா XE வைரஸ் தொற்று" குறித்து அமைச்சர் மா.சு முக்கிய தகவல்!!

புதிதாக பரவிவரும் கொரோனா XE வைரஸ் தொற்று குறித்து  மக்கள் பீதி அடைய தேவையில்லை என தமிழக  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

புதிதாக பரவிவரும் "கொரோனா XE வைரஸ் தொற்று" குறித்து அமைச்சர் மா.சு முக்கிய தகவல்!!

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இதனை தெரிவித்தார்.மேலும் கொரோனோ வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றம் தமிழகத்தில் இன்னும் கண்டறியப்படவில்லை என  விளக்கம் அளித்தார்.

முன்னதாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் திருமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை துவக்கி வைத்தார்.