அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடி ஊதியம்...! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு....!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடி ஊதியம்...! பள்ளிக்கல்வித்துறை  உத்தரவு....!

கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

பள்ளிக்கல்வித்துறையில் சமீபத்தில் செய்யப்பட்ட நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படாத நிலையில் சுமார் 20000 பேர் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 நாட்களுக்கு மேலாகியும் சம்பளம் வழங்கப்படாததால் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்த ஆசிரியர் சங்கங்கள் திட்டமிட்டு இருந்தன.

இந்நிலையில் சம்பளம் வழங்கப்படாத ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் சம்பள பட்டியலினை கருவூல அலுவலகத்தில் உடனடியாக சமர்ப்பித்து ஊதியம் பெற்று வழங்க வேண்டும் எனவும் இதில் எவ்வித காலதாமதமும் ஏற்படக் கூடாது எனவும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா: கொலிஜியம் எடுத்த திடீர் முடிவு...மத்திய அரசு ஏற்குமா?