தமிழகத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் கட்சிகளை மறந்து ஒரே குரலாக இருப்போம்.! -திமுக ஆர்.எஸ்.பாரதி

தமிழகத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் கட்சிகளை மறந்து ஒரே குரலாக இருப்போம்.! -திமுக ஆர்.எஸ்.பாரதி

தமிழக பிரச்சனைக்காக கட்சிகளை மறந்து ஒரே குரலாக இருப்போம் என்பதை நிரூபித்து உள்ளோம் ஜெயக்குமார் முன்னிலையில் ஆர். எஸ்.பாரதி பேட்டி

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் நகலை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிடம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் வழங்கினர். மேலும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினார்கள். 

இந்த டெல்லி பயணத்தை முடித்து கொண்டு அனைத்து கட்சி பிரதிநிதிகள் சென்னைக்கு திரும்பினார்.அப்போது விமான நிலையத்தில்  திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், டெல்லியில் தமிழகத்தின் சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பில் 13 பிரதிநிதிகள் பங்கேற்றோம். முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தை மனுவாக தந்தோம்.ஒரு மணி நேரம் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினோம். உறுதியாக மேகதாதுவில் அணை கட்ட எந்தவித அனுமதி வழங்க மாட்டோம் என்ற உறுதியை மத்திய மந்திரி கூறினார். 

தமிழகத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் கட்சிகளை மறந்து மதங்கள் உள்பட எல்லாவற்றையும் துறந்து தமிழகத்திற்காக குரல் தருவோம் என்பதை இந்த குழு நிரூபித்து உள்ளது. மத்திய மந்திரி தந்த வாக்குறுதியும் நம்பிக்கை அளித்து உள்ளது" எனத் தெரிவித்தார்.