பள்ளி, கோவிலுக்கு அருகில் மது கடைகள் இருந்தால் அவை அகற்றப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி  

விதி முறைகளுக்கு மாறாக பள்ளிகள், கோவிலுக்கு அருகில் மது கடைகள் செயல்படுவதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மேலாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.. மேலும் நடந்த ஆலோசனையில் அனைத்து கடைகளுக்கு முன்பும் ஒரு வார காலத்திற்குள் விலைப்பட்டியல் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 5410 கடைகள் 2808 பார்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோவிட் தொற்று காரணமாக மதுபான தற்போது கூடங்கள் இயங்குவதில்லை. அனுமதிக்கபட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் மது கடைகள் திறக்ககூடாது. கூடுதலாக மதுபானங்கள் நிர்ணயித்த விலையை விட அதிக  விலைக்கு விற்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கபடும் என்றும் தெரிவித்தார்.

கொருக்குப்பேட்டை பகுதியில் குறைந்த தூரத்தில் 7 டாஸ்மாக் கடைகள இருப்பதாக புகார்கள் எழுத்துள்ளது. எனவே அதனை ஆய்வு செய்து கடைகள் இட மாற்றம் செய்யப்படும் என்றார். மேலும் வரக்கூடிய காலங்களில் துறையில்  என்னன்ன குறைபாடுகள் உள்ளதோ அதனை இனி வரக்கூடிய ஆய்வு கூட்டங்களில் ஆலோசிப்போம் என்று கூறிய அவர், விதி முறைகளுக்கு மாறாக பள்ளிகள், கோவிலுக்கு அருகில் மது கடைகள் செயல்படுவதை எங்கள் கவனத்திற்கு கொண்டுவந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என அவர் தெரிவித்தார்.