"அவரைப் பற்றி பேச ஒன்றுமில்லை..." சுப்பிரமணியன் சுவாமி-வை பங்கம் பண்ணிய அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகளில் தவறு நடந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுப்ரமணிய சுவாமிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ள பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மூடப்பட்டு கிடக்கும் பள்ளிகளை திறக்க பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிகல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி விதிக்கப்பட்ட கல்வித்தொகையை மட்டுமே பெற்றோர்கள் செலுத்த வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அண்மையில் ப்ளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கான மதிப்பெண்களை வழங்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்ற அவர், இந்த மதிப்பெண் அடிப்படையில் நீட் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்ட பின் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படும் என்றார்.  

தொடந்து பேசிய அவரிடம், பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் தவறு நடந்தால் அது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.