சுற்றுப் பயணம் முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சா் சொன்னது என்ன?

சுற்றுப் பயணம் முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சா் சொன்னது என்ன?
Published on
Updated on
1 min read

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டு பயணங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரத்து 233 கோடி ரூபாய் முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொிவித்தார்.

தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈா்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 9 நாள் அரசு முறை பயணத்தை முடித்த முதலமைச்சா் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்பினாா். அப்போது அவரை வரவேற்பதற்காக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினா், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர், புதிய முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துத்துள்ளதாக தொிவித்த அவா், தமிழகத்தில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அவர்களை அழைத்துள்ளதாகவும் தொிவித்தாா். 

தொடர்ந்து பேசிய அவர், குறைந்தபட்சமாக 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுகளை ஈர்க்கும் திட்டத்துடன் பயணம் மேற்கொண்டதாகவும், ஆனால் தற்போது 3 ஆயிரத்து 233 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இதன் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்களுடைய மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறோம் என தொிவித்தாா். தொடா்ந்து, நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் உண்மையான சோழர் பரம்பரையை சோ்ந்த செங்கோலாக இருந்தால் தமிழ்நாட்டிற்கு பெருமை தான் என்று பேசினார். மேலும், மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்த அன்றே செங்கோல் வளைந்துவிட்டது என்றும் விமர்சித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்ல விருப்பமில்லை என்று தெரிவித்த முதலமைச்சர், மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாகவும், இதுகுறித்து நீர்வளத் துறை அமைச்சர் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார். 

மேலும், இன்று டெல்லி மற்றும் பஞ்சாப் முதலமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்த அவர், ஏற்கனவே அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்க கூடிய செயல்பாடு நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் திமுகவும் முழு அளவில் ஈடுபடும் என தொிவித்தாா். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com