"நான் என் அப்பா பேச்சை கேட்டிருந்தால்,... இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன்..!" - தமிழிசை சௌந்தரராஜன்.

"நான் என் அப்பா பேச்சை கேட்டிருந்தால்,...   இந்த நிலையில் இருந்திருக்க  மாட்டேன்..!" - தமிழிசை சௌந்தரராஜன்.

அன்னையர் தினத்தை யொட்டி சென்னை, பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் பெண் மருத்துவர்களுக்காக நடைபெறும் ("Varahi Conference 2023") என்னும் கருத்தரங்கில் தெலங்கானா ஆளுநரும்  புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான  தமிழிசை சௌந்தரராஜன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என் வி என் சோமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மேடையில் பேசும்போது,... 

அனைவருக்கும்  அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.தொடர்ந்து பேசுகையில், தான்  தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்ற போது  எப்படி புதிதாக உருவான மாநிலத்தை சமாளிப்பார் என்று கேள்வி எழுந்ததாகவும், அதற்கு, தான் ஒரு  மகப்பேறு மருத்துவர் என்றும், புதிதாக பிறந்த குழந்தைகள் எனக்கு பார்த்துக் கொள்ள தெரியும் என்று பதிலளித்ததாகவும் நினைவுக்கர்து பேசினார். 

மேலும் அவர், பெண்கள் என்றாலே எவ்வளவு பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறனை வைத்து தான் படைக்கப்பட்டிருப்பதாகவும், தான் இன்று இந்த மேடையில் நிற்க தன்  அம்மாவுக்கு கடமை பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். அதோடு, தான தனது தந்தை பேச்சை கேட்டு இருந்து இருந்தால் இங்கு இருந்து இருக்க முடியாது எனவும்,  வாழ்க்கையே வேறு மாறி இருந்து இருக்கும் எனவும், மருத்துவராக மட்டுமல்ல இயக்கமே வேறாக இருந்து இருக்கும் என்றும் கூறினார். 

மேலும், அரசியலுக்கு வந்த பின்பும் தான் தன் மருத்துவ தொழிலை தொடர்ந்ததாகவும், .
முழுமையாக அரசியல் பணி செய்ய வேண்டிய காரணத்தினால் தான் அதை தை விட்டுவிட்டதாகவும் தனது படிப்பு தான் தனக்கு உதவுவதாகவும் தெரிவித்தார். 

அதையடுத்து,  இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனாவினால் தன்  தாயை இழந்ததாகவும்  5 பிள்ளைகளை வளர்ப்பதை மட்டுமே கடமையாக கொண்டவர் தன் அம்மா எனவும், மேலும்,  ஒரு அரசியல்வாதியின் மனைவி என்று சொல்வதை விட ஒரு அரசியல்வாதியின் அம்மா என்று சொல்வது தான் பெருமை  என எண்ணுவர் எனவும் தெரிவித்தார்.  

மேலும், Use and throw வாக அம்மாக்களை வைக்காதீர்கள்.என்று கூறிய அவர்,  "முழுமையான வாழ்க்கையை அவர்கள் நமக்கு கொடுக்கிறார்கள். நாம் அதை செய்வதில்லை" என குறிப்பிட்டு உள்ளார். அம்மாவை சொத்தாக நினைப்பது குறைந்து கொண்டு வருவதாக தெரிவித்த அவர் தாய் தந்தை முழுமையாக நம்மை வளர்க்கிறார்கள் வயதான பின்னர் முழுமையாக அவர்களுடன் இருக்க வேண்டும் என்றும் பெண்கள் சக்தி மிக்கவர்கள் என்பதால்தான் பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே அஞ்சுகிறார்கள் என  தெரிவித்துள்ளார்.  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கல்லூரிகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்கள் அதிகளவில் பெண்களாகத்தான் உள்ளார்கள்.

இதையும் படிக்க     }   விடுதலை பார்ட் -2 அக்டோபர் வெளிவரும் - நடிகர் கொடுத்த அப்டேட்

பெண்கள்  உங்கள் உடலை பார்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைப்பதாகவும்  சேலைக்கு செலவு செய்வதை விட பரிசோதனைக்கு செலவு செய்யுங்கள் என்றும் ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளுக்கு முதல் நாளோ அடுத்த நாளோ முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். 

மேலும், "பெண்கள் என்றால் சவால்கள் இல்லாத சூழல் இருக்கவே இருக்காது. எவ்வளவு சவால்கள் இருந்தாலும் வேர்களாக படர்ந்து காய் , கனி தருவோம்..எல்லா இடத்திலும் பெண்கள் மட்டுமே சாதித்து விட முடியாது சகோதரர்கள் உடன் இருக்க வேண்டும். பெண்களுக்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்".

"யோகா செய்தால் மன நலமும் பாதுகாக்கப்படும், உடல் நலமும் பாதுகாக்கப்படும்,யோகா செய்தால் 48 மணி நேர வேலையை 24 மணி நேரத்தில் செய்யலாம்.  இது என் தனிப்பட்ட அனுபவம்‌" என்று தெரிவித்துள்ளார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியதோடு அனைவரும் தங்களது அன்னைக்கு முதல் கட்ட உடல்நல பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிக்க     }   நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம்,.. காணொலி காட்சி வாயிலாக தி.மு.க. ஆலோசனை....!