திமுக உயிரோடு இருக்க வேண்டும் என்றால்.....? - அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

திமுக உயிரோடு இருக்க வேண்டும் என்றால் பாஜகவின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளது பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. 

திமுக உயிரோடு இருக்க வேண்டும் என்றால்.....? - அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்ததையடுத்து தமிழக அரசும் விலையை குறைக்க வேண்டும் என்றும், தவறினால் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி இன்று போராட்டம் நடைபெற்றது. சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இருந்து போராட்டம் தொடங்கிய நிலையில் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 

முன்னதாக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, இன்னும் 20 நாட்களில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு செய்யாவிட்டால் உண்ணாவிரதம், 30-வது நாளில் திருச்சியில் மாபெரும்  போராட்டம் தொடரும் எனவும் கூறினார். இன்னும் 2 ஆண்டுகள் இப்படித்தான் போராட்டங்களாக இருக்கும் என்றும் பாஜக தொண்டர்கள் அதற்கும் கைது நடவடிக்கைகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாஜக-திமுக சண்டை தொடரும் என்றும் இறுதியில் வெல்லப் போவது ஒருவர்தான் என்றும் அது ஸ்டாலினா? அண்ணாமலையா? என்று பார்த்து விடுவோம் என்றும் சவால் விடுத்தார். 

திமுக இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் பாஜகவின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தார். இன்னும் 2 நாளில் 2 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் நிலக்கரி மற்றும் மின்சாரத்துறையில் என்ன நடக்கிறது என்பது அறிக்கை மூலம் வெளியிடப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். இதனிடையே போராட்டக்காரர்களை காவல்துறை கைது செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது வரை காத்திருக்காமல் கூட்டம் கலைந்து சென்றது.