ஐ.பி.எஸ் அதிகாரிகள். டி.எஸ்.பிக்கள் மாற்றம்:  தமிழக அரசு உத்தரவு

2 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் 3 டி.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐ.பி.எஸ் அதிகாரிகள். டி.எஸ்.பிக்கள் மாற்றம்:  தமிழக அரசு உத்தரவு

2 ஐ. பி.எஸ் அதிகாரிகள் மற்றும் 3 டி. பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப் பித்துள்ளார்.

தமிழகத்தில் ஐ. பி.எஸ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியிடமாற்றம் தொடர்ந்து வரும் நிலையில் ஆயுதப்படை ஐ.ஜி-யாக இருந்து வந்த டாக்டர் லோகநாதன் ஐ. பி.எஸ் சென்னை தலைமையக கூடுதல் காவல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமையக கூடுதல் காவல் ஆணையர் கணேசமூர்த்தி ஐ. பி.எஸ் காலியிடமாக உள்ள தலைமையகம் ஐ.ஜி பொறுப் பில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

அதேபோல திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ராஜராஜன், தூத்துக்குடி காவலர் பள்ளி எஸ். பி மற்றும் முதல்வராகவும், சென்னை சிறப்பு காவல்படை பூந்தமல்லி படாலியன் கமாண்டண்ட் சுரேஷ் குமார் திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், தூத்துக்குடி காவலர் பள்ளி எஸ். பி/ முதல்வர் செந்தில் சென்னை சிறப்புக் காவல் படை பூந்தமல்லி படாலியன் கமாண்டண்ட் ஆகவும் முறையே பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.