கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற ஐ.சி.எஃப் அதிகாரிகள் கைது!

50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற சென்னை ஐ.சி.எஃப். தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை பொறியாளர் கத்பால் உள்ளிட்ட 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். 

கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற ஐ.சி.எஃப்  அதிகாரிகள் கைது!

50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற சென்னை ஐ.சி.எஃப். தொழிற்சாலையின் முன்னாள் முதன்மை பொறியாளர் கத்பால் உள்ளிட்ட 5 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். 

சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் முதன்மை பொறியாளராக பணியாற்றி வந்த கத்பால் கடந்த மார்ச் 31ஆம் தேதி தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் பதவியில் இருந்த காலகட்டத்தில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களிடம் 5 கோடியே 89 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு, ஐ.சி.எஃப். தொழிற்சாலை சம்மந்தப்பட்ட டெண்டர்களை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் இருந்து லஞ்ச பணத்தை தவணை முறையில் வாங்கியதையும், முதல் தவணையாக 50 லட்சம் ரூபாய் டெல்லியில் உள்ள கத்பாலின் சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டதையும் கண்டறிந்தனர். இதனையடுத்து, இரண்டாவது தவணையாக 50 லட்சம் ரூபாயைப் பெற்ற கத்பால் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் உட்பட மொத்தம் 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், கத்பால் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 2 கோடியே 75 லட்ச ரூபாய் பணம் மற்றும் 23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், டெல்லி மற்றும் சென்னையில் கத்பாலுக்குச் சொந்தமான 9 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.