ஆட்சியை கலைப்பதை தவிர வேறு வழி இல்லை... PSBB பள்ளியில் விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும்!! உதார் விடும் சு.சுவாமி

பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி விவகாரத்தில் உள்நோக்கத்துடன் செயல்பட்டால் தமிழக அரசை கலைக்க வேண்டிவரும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆட்சியை கலைப்பதை தவிர வேறு வழி இல்லை... PSBB பள்ளியில் விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும்!! உதார் விடும் சு.சுவாமி

சென்னை கே.கே.நகர், பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள சூழலில்  பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தலையிட்டு தமிழக அரசை மிரட்டும் விதமாக விடுத்துள்ள எச்சரிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்... பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் திமுகவுக்கு பின்புலமாக தி.க.தான் உள்ளது. இந்த விஷயத்தில் விசாரணை ஒருதலைபட்சமாக இல்லாமல் நேர்மையாக நடைபெற வேண்டும். விசாரணையில் எள்ளளவு சந்தேகம் ஏற்பட்டாலும் விசாரணையை இங்கு நடைபெற முடியாதபடி செய்து விடுவேன். அத்துடன் இந்த விவகாரத்தை வைத்து பள்ளி மூடவோ, பள்ளி நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சித்தாலோ அதனை செயல்படுத்த இங்கு இந்த ஆட்சி இருக்காது. அதாவது திமுக ஆட்சியை கலைக்க வேண்டிவரும் என்று தனது வழக்கமான ஸ்டைலில் மிரட்டியுள்ளார்.

மற்றொரு டிவீட்டில்... “சென்னையில் இருக்கும் மரியாதைக்குரிய பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி மூன்று கிளைகளாகச் செயல்படுகிறது. அவற்றில் சுமார் 10,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியைப் பிராமணர்கள் நிர்வாகம் செய்கின்றனர். இந்த பள்ளியில் பணிபுரிந்த ஒரு ஆசிரியர் மாணவியிடம் தவறாக நடந்துகொண்டிருக்கிறார். அதற்காக தி.க மற்றும் தி.மு.க ஆதரவாளர்கள் பள்ளி நிர்வாகிகளைத் தாக்குகின்றனர். அந்தக் குண்டர்களை தமிழ்நாடு முதலமைசர் ஸ்டாலின் கட்டுப்படுத்தாவிட்டால், PSBB பள்ளியை நான் பாதுகாப்பேன், “PSBB பள்ளி தரப்பிலிருந்து என்னை அணுகினார்கள். அவர்களிடம் தமிழ்நாடு பாஜக என்ன செய்துகொண்டிருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கட்சி செயலற்றுக் கிடப்பதாகக் கூறினர்கள்” இவ்வாறு தனது அடுத்தடுத்த டிவீட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.