ஞாபகம் வருதே ஞாபகம் வருதே முதலமைச்சராவேன் என்று நானும் நினைத்ததில்லை நீங்களும் நினைத்திருக்க மாட்டீர்கள் மேடையில் லட்சியத்தை பேசி நெகிழ்ச்சி

முன்னாள் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பலரை பார்க்கும் பொழுது ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்கின்ற பாடலை பாட ஆசையாக உள்ளது - என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேச்சு
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே  முதலமைச்சராவேன் என்று நானும் நினைத்ததில்லை நீங்களும் நினைத்திருக்க மாட்டீர்கள்   மேடையில் லட்சியத்தை பேசி நெகிழ்ச்சி
Published on
Updated on
2 min read

முன்னாள் மாணவனாக நான்

 சென்னை சேத்துப்பட்டில் இயங்கி வரக்கூடிய சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் முன்னாள் மாணவர்களாக  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பி ராஜா கலாநிதி வீராசாமி மற்றும் 500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர் நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் 15 லட்சம் ரூபாய் செலவில் பள்ளியில் மேம்படுத்தப்பட்ட கூடைப்பந்து விளையாட்டு அரங்கம் மற்றும் மழைநீர் சேமிப்பு திட்டத்தையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்

.


தூக்கம் கூட வரவில்லை

பள்ளியின் முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் ஜெயராமன்  எனக்கு கற்பித்ததில் பெருமை என்று கூறி இருந்தார் ஆனால் அவரிடம் தமிழ் கற்றதில் நான் பெருமை அடைகிறேன்அவரிடம் அடி வாங்கி அடி வாங்கி படித்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்ஒரு முதல்வராக  இந்த விழாவிற்கு வரவில்லை முன்னாள் மாணவனாகவும் உங்கள் நண்பனாகவும் வருகை புரிந்துள்ளேன் சாதாரணமாக நான்  தூங்குவதே இரண்டு மூன்று மணி தான் ...ஆனால் படித்த பள்ளிக்கு செல்வதன் காரணமாக எனக்கு தூக்கம் கூட வரவில்லை

நடந்ததுதான் பள்ளிக்கு வருவதில் பலகாரணம் இருக்கு 

என் அப்பா போக்குவரத்துறை அமைச்சராக இருக்கும்போது நான் பள்ளிக்கு 29 சி பேருந்தை பிடித்து தான் வருவேன் சில நேரம் சைக்கிளில் கூட வருவேன்ஸ்டெர்லிங் ரோட்டில் இறங்கி மூன்று கிலோமீட்டர் நடந்ததுதான் பள்ளிக்கு வருவேன்நடந்து வருவதற்கு பல காரணங்கள் உண்டு ஆனால் அதை நாம் இப்பொழுது கூற முடியாது ...என்று புன்னகைத்தபடி தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு எனது செக்யூரிட்டி ஒத்துழைத்திருந்தால் பேருந்தில் சைக்கிளில் தான் வந்திருப்பேன்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

இங்கு பலர் முகத்தை பார்க்கும் பொழுது எனக்கு ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது அதை பாடவும் ஆசையாக உள்ளது 

அரசியலுக்கு  வந்து முதலமைச்சராவேன் என்று நானும் நினைத்ததில்லை நீங்களும் நினைத்திருக்க மாட்டீர்கள்

நான் மனப்பூர்வமாக சொல்வேன் நான் முதல்வன் ஆனதற்கு நிச்சயமாக இந்த பள்ளியும் ஒரு காரணம்

மேயரின் சிபாரிசு

இந்தப் பள்ளியில் பல மருத்துவர்கள் பொறியாளர்கள் இருந்தபோதிலும் ஒரு முதல்வரை உருவாக்கிய பள்ளியில் படித்தது எனக்கு பெருமைதான்சென்னையில் மக்களால் முதல் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக நான்  பொறுப்பேற்றேன் முரசொலி மாறன் தான் எங்களை பள்ளியில் சேர்த்து கண்காணித்து வந்தார்சர்ச் பார்க் பள்ளியில் நான் சேரும்பொழுது எனது பெயரை மாற்ற சொல்லி இருந்தார்கள்... அப்பொழுது பள்ளியை மாற்றினாலும் பெயரை மாற்ற மாட்டேன் என்று  என் தந்தை  தெரிவித்தார்பிறகு இந்தப் பள்ளியில் சேர நுழைவுத்தேர்வு வைத்திருந்தார்கள் அதில் நான் தோல்வி அடைந்து விட்டேன்பிறகு அப்பொழுது மேயராக இருந்தவரின் சிபாரிசு காரணமாக இந்த பள்ளியில் சேர்ந்து படித்தேன்

முன்னாள் மாணவர்கள் அந்த பள்ளிக்கு நலத்திட்டங்களை செய்ய முன்வர வேண்டும் ஒவ்வொரு  பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அந்த பள்ளிக்கு நலத்திட்டங்களை செய்ய முன்வர வேண்டும்19 ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முன்னாள் மாணவர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் இணைந்து நலத்திட்டங்களை செய்வதற்கான முன்னெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள  இருக்கிறதுமுன்னாள் மாணவர்கள் பொதுமக்கள் தன்னால்வலர்கள் கொடுக்கின்ற நிதியின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த உள்ளோம் அதற்கான திட்டத்தை வருகின்ற 19ஆம் தேதி தொடங்க இருக்கிறோம். இந்த நிதி முழுக்க அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு மட்டுமே உபயோகப்படுத்தப்படும்

தமிழகத்தை இந்தியாவிலேயே சிறந்த கல்வி மாநிலம் ஆக்குவதே எனது லட்சியம் என மேடையில் பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com