எனக்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது..டிடிவி தினகரன்.!!

எனக்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது என அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

எனக்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது..டிடிவி தினகரன்.!!

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அமமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரன்  திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், எனக்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும்   அந்தக் கட்சியின் உள் கட்சி விவகாரத்தில் எட்டிப் பார்த்து கருத்து சொல்ல விரும்பவில்லை  என கூறினார்.

மேலும் திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை முறியடிப்போம் என தெரிவித்தார்.

மேலும் அமமுகவை அதிமுகவுடன் இணைப்பதற்கு  அமமுக நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்துள்ளாராம் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், யூகங்களுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை என தெரிவித்தார்.

5 மாநில தேர்தல் பாஜகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு தனக்கு ஆருடம் மற்றும் தீர்க்கதரிசனம் தெரியாது என பதிலளித்தார்.