" செந்தில்பாலாஜி கைதானதை நினைத்து நினைத்து மது அருந்துகிறேன் " - மதுப்பிரியர் விரக்தி.

" செந்தில்பாலாஜி கைதானதை நினைத்து நினைத்து மது அருந்துகிறேன் " -   மதுப்பிரியர் விரக்தி.

செந்தில்பாலாஜி கைதானதை நினைத்து துக்கத்தில் தான் மது அருந்துவதாக மதுப்பிரியர் ஒருவர் மது வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் இந்த சம்பவம் அரங்றேியுள்ளது.

ஊழல் தொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழலை  உருவாக்கியுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி கைதானதையடுத்து, விரக்தியில் கவலையை மறக்க ஒரு குடிமகன் மது அருந்தும் செயல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும், " தலைவர் கைதான பிறகும் மதுபான கடையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள் தலைவர் செந்தில் பாலாஜி கைதானது நினைத்து துக்கத்தில் தான் சரக்கு அடிக்கின்றேன் ", என மதுப்பிரியர் ஒருவர் மதுக்கடை ஊழியரிடம் மது வாங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடையில் மதிப்புரியர் ஒருவர் மது வாங்கிவிட்டு தலைவர் கைதாகி விட்டார் ஆனால் இருந்தும் டாஸ்மார்க் கடைகளில் பத்து ரூபாய் அதிகம் வாங்குகின்றனர் எனவும் தலைவர் கைதான துக்கத்தில் தான் நான் சரக்கு அடிக்கிறேன் எனவும் நகைச்சுவையாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

 இதையும் படிக்க    | திமுகவின் கருவூலம் செந்தில் பாலாஜி - அண்ணாமலை பளீச்!!!