கொரோனா உடன் பசி, பட்டினி கொடுமையும் இணைந்து விடும்: கமல்ஹாசன் எச்சரிக்கை

கொரோனா உடன் பசி, பட்டினி கொடுமையும் இணைந்து விடும்: கமல்ஹாசன் எச்சரிக்கை

சிறு, குறு நடுத்தர தொழில்களை காக்க, விரைவான நடவடிக்கையை, அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால், கொரோனா உடன் பசி, பட்டினி கொடுமையும் இணைந்து விடும் என மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழகத்தில் தொழில் துறையை பாதுகாக்க, மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சோப், கிருமி நாசினி தயாரிப்பில் ஈடுபடுவோரை, அத்தியாவசிய பொருள் தயாரிப்பவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசிடம் இருந்து உதவி கிடைக்காவிட்டால், தொழில் நிறுவனங்களை மூடும் நிலை ஏற்படும் என கூறினார்.

சிறு, குறு, நடுத்தர தொழில்களை காக்க, விரைவான நடவடிக்கையை, அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், கொரோனா உடன் பசி, பட்டினி கொடுமையும் இணைந்து விடும் என கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.