காசிமேடு: எப்படி இருந்த இடம்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த புரட்டாசி மாசம் தான்..!

மக்கள் கூட்டமின்றி அமைதியாக, வெறிச்சோடி காணப்படும் காசிமேடு மீன் சந்தை..!

காசிமேடு: எப்படி இருந்த இடம்.. எல்லாத்துக்கும் காரணம் இந்த புரட்டாசி மாசம் தான்..!

வார இறுதி நாட்களும், இறைச்சி கடைகளும்:

பொதுவாக தமிழ்நாட்டில் வார இறுதிநாட்கள் இறைச்சி கடைகளிலும் மீன் சந்தைகளிலும் அசைவ பிரியர்களின் கூட்டம் அலை மோதுவதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த புரட்டாசி மாதம் வந்தால் மட்டும் இங்கெல்லம் ஆட்களே இருக்க மாட்டார்கள். இறைச்சி கடைகளை கடந்து செல்லும் பெரும்பான்மையான மக்கள் ஏக்கத்துடனேயே அக்கடைகளை பார்த்து செல்வர். 

அலைமோதும் காசிமேடு மீன் சந்தை:

அந்த வகையில், சென்னையை பொருத்தவரை, காசிமேட்டில் உள்ள மீன் சந்தையில் வார இறுதி நாட்களில் நிற்கவே இடம் இல்லாத அளவு, மக்கள் கூட்டம் அலைமோதும். சில்லறையாக வாங்குபவர்கள், மொத்தமாக வாங்குபவர்களை தாண்டி இந்த காசிமேடு மீன் சந்தையை பார்த்து செல்வதற்கே கூட்டம் கூடும். 

வெறிச்சோடிய காசிமேடு:

நள்ளிரவு முதல் ஏல அடிப்படையில் நடைபெறும் விற்பனையில், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்வர். அப்படி ஆராவாரம் நிரம்பி காணப்பட்ட காசிமேடு மீன்சந்தை தற்போது மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

வஞ்சிரம் ரூ.500:

கடந்த வாரம் முதல் புரட்டாசி மாதம் தொடங்கி இருப்பதாலும், இன்று புரட்டாசி மகாளய அமாவாசை என்பதாலும், பொது மக்களின் வருகை வெகுவாக குறைந்தது. மக்களின் கூட்டம் குறைந்ததால், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்திருக்கிறது. எப்போதும் அதிக விலைக்கு விற்பனையாகும் வஞ்சிரம் கிலோ ரூ.500-க்கும், சங்கரா ரூ.400-க்கும், நண்டு, கடம்பா போன்றவரை ரூ.400-க்கும் விற்பனையாகி செய்யப்படுகிறது.