கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்? வீடியோ வெளியிட்ட சென்னை மாநகராட்சி...

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்? வீடியோ வெளியிட்ட சென்னை மாநகராட்சி...

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு வீட்டில் பாதுக்காப்பாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்? என்று விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

*கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வீட்டு தனிமையில் இருப்பின் தனியான காற்றோற்றமான அறையில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

* தனிக்கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும்.

* கொரோனா பாதிக்கப்பட்டவர் இருக்கும் அறைக்குள் வேறு யாரையும் அனுமதிக்க கூடாது.அவர்களும் அறையை விட்டு வெளியேற கூடாது.

* மற்றவர்களுடன் தொடர்ப்பு இல்லாதவாறு உணவை பெற்று கொள்ள வேண்டும்.

*நன்றாக சாப்பிட வேண்டும். சாப்பிட்டால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* போதிய அளவு,தண்ணீர், பழரசம், இளநீர் அருந்த வேண்டும்.

* பிறரிடம் நேரடியாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.. நேரடியாக பேசும் சூழல் ஏற்பட்டால் முககவசம் அணிந்து பேச  வேண்டும்.

* போதுமான தூக்கம் அவசியம்.

* சோர்வு ஏற்படுத்தும் செயலில் ஈடுபட கூடாது. 

* அடிக்கடி கிருமி நாசினி, சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

* மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* கழிவுகளை தனிப்பையில் அப்புறப்படுத்த வேண்டும்.

* பல்ஸ் ஆக்சிமீட்டர் மற்றும் உடல் வெப்ப நிலையை அவ்வப்போது சோதனை மேற்கொள்ள வேண்டும்...ஆக்சிஜன் அளவு 94 கீழ் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.