வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு : இதுவரை பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

தமிழகத்தில் 38 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பதிவு செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு : இதுவரை பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இது குறித்து கருத்துக்கள் கேட்டறியப்பட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு இது தொடர்பான கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் பொதுமக்கள் இணைய வழி வாயிலாகவும் தங்களுடைய ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக முழுவதும் இதுவரை சுமார் 38 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பதிவு செய்துள்ளதாகவும் அதில் அதிகபட்சமாக அரியலூர்,  பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்களை சார்ந்த வாக்காளர்கள் இதில் அதிகளவு ஆர்வம் காண்பித்துள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

அனைத்து வாக்காளர்களும் தங்களின் வாக்காளர் ஆட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் ஆணையம் சார்பாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இப்பணி 2023 மார்ச் 31 வரை நடக்க இருப்பதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.