முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் பெருமை அமைச்சர் பேச்சு

முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் பெருமை அமைச்சர் பேச்சு

தி.மு.க தலைவர் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் "மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள்" என்ற தலைப்பில் தொடர் நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று, "ஜெயினர் உறவு நம்மோடு! செய்வோம் நாளும் அன்போடு!" என்ற முழக்கத்துடன் ஜெயின் சமூகத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கும் நிகழ்ச்சி சென்னை சவுக்கார்பேட்டையில் நடைபெற்றது. 

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் - மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் - அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் பியாரிலால் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க | நல்ல செய்தி தபாலில் வரும் கெட்ட செய்தி தந்தியில் வரும்...” கமல்ஹாசன் பேச்சு!!

இந்த நிகழ்ச்சியில் 300 ஜெயின் குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மாவு ஆகியவை அடங்கிய மளிகை தொகுப்பு, உடைகள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

மேலும் படிக்க | தங்களுடைய கருத்தை வெளியிடுவதற்கான அனைத்து சுதந்திரமும் உள்ளது - ஜெகதீப் தன்கர்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது

தன்னுடைய பிறந்தநாளை எந்தவித ஆடம்பர செயல்கள் மூலமும் கொண்டாட வேண்டாம் என முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார். அதை பின்பற்றி இப்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை தி.மு.க சார்பில் வழங்கி வருகிறோம்.   பொதுவாகவே நிகழ்ச்சிகளுக்கு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க என்பது   பெயர்போனது. இந்த நிகழ்ச்சியையும் சிறப்பான முறையில் நடத்தி உள்ளனர். முதலமைச்சரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன் என்றார்.

கொலை முயற்சி வழக்கில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு -  வழக்கின் பின்னணி என்ன?! | Minister Anita Radhakrishnan released from  attempted murder case - Vikatan