வீடுகளுக்கே சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் இன்று தொடக்கம்...

வீடுகளுக்கே சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் திட்டம் இன்று தொடக்கம்...

வீடுகளுக்கே சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தமிழக அரசின் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை ஜூன் 7-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தள்ளுவண்டி, வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று காய்கனி விற்பனை செய்யப்படும் நிலையில் வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அந்த வகையில் மளிகை கடை வியாபாரிகள் தங்களது வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் இன்று முதல் தெருத்தெருவாக சென்று மளிகை பொருள்களை விற்பனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகைப் பொருட்களை விநியோகிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.