பத்திரிகையாளர்களுக்கு விரைவில் வீட்டுமனை - அமைச்சர் சாமிநாதன் தெரிவிப்பு!

பத்திரிகையாளர்களுக்கு விரைவில் வீட்டுமனை - அமைச்சர் சாமிநாதன் தெரிவிப்பு!

பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் விரைவில் சரி செய்யப்பட்டு பட்டா வழங்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மறைந்த கவிஞர் கண்ணதாசனின் 96வது பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் சாமிநாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இடப்பிரச்னை காரணமாக சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு நிலம் வழங்க முடிவதில்லை எனவும் எனவே அருகில் உள்ள மாவட்டங்களில் இடம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.