ஆலயங்களைத் உடனடியாக திறக்க வேண்டும்... இந்து முன்னணி அமைப்பினர் தூத்துக்குடியில் சூடம் ஏற்றி வழிபாடு போராட்டம்!
தூத்துக்குடியில் இந்து ஆலயங்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பினர் ஆலயம் முன்பு சூடம் ஏற்றி வழிபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, திருவள்ளூர், செங்கப்பட்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலுக்கு 'மிக்ஜாம்' என பெயரிடப்பட்டுள்ளது. இது சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 290 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாச்சந்திரன், மிக்ஜாம் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுபெறக்கூடும் என தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு திசையில் தெற்கு ஆந்திரா கடற்கரைக்கு இணையாக நகர்ந்து 5-ஆம் தேதி காலை நெல்லூருக்கும், மசூலிபட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : ராஜஸ்தான் : காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய பாஜக...!
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிக கன மழை பெய்யும் என்றும், நாளை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் நாளை தீவிர புயலாக வலுபெறக்கூடும் என்றும், அப்போது வலுவிழந்து புயலாக கரைய கடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் தொடங்கி கடலூர் வரையில் கடலோர மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திரா, கடலூர் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் 5-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 81 புள்ளி 36 அடியாக உயர்ந்தது. நீரின் இருப்பு 16 புள்ளி 41 டி.எம்.சியாகவும் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க : ராஜஸ்தான் : காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய பாஜக...!
இந்நிலையில், மற்றொரு அணையான கொடிவேரி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே இரவில் 3 அடி உயர்ந்து 143 அடி கொள்ளளவில் 113 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் காரையாறு அணையின் நீர்மட்டமும் 3 அடிகள் உயர்ந்துள்ளது.
மிக்ஜாம் புயலை முன்னிட்டு, புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் மருத்துவத்துறை முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் மருத்துவத்துறை முன்னெச்சரிக்கையாக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் செல்போன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஜெனரேட்டர்கள், மின்சார பேட்டரிகள் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ராஜஸ்தான் : காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய பாஜக...!
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில், அவசர கால தேவைக்கான மருந்துகள் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ளவும், மேடான பகுதிகளுக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையில், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவமனை வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
24 மணி நேரமும் அவசர கால மருத்துவக் குழு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ள சுகாதாரதுறை, புயலுக்குப் பின்னும் தொற்றுநோய் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, பரிசோதனைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் நிலை கொண்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
வங்க கடலின் வடமேற்கு பகுதியில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர்கள் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்படி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கட்டுபாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியை பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பார்வையிட்டனர். அப்போது நீர் மட்டம் உயர்ந்தால் எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து செங்குன்றத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்புக் குழுவினரை சந்தித்தனர். புழல் ஏரியிலிருந்து நான்காவது நாளாக இரண்டாயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : ராஜஸ்தான் : காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய பாஜக...!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் முத்துசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டன.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாமை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியாக கழிவறை வசதிகள் உள்ளனவா என கேட்டறிந்த அமைச்சர் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தாம்பரம் மாநகராட்சியில் மழை காலங்களில் பல்வேறு பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகும் மக்களை தங்க வைக்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயல் உருவானதைத் தொடர்ந்து தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவடைந்தது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து ஐந்தாம் தேதி நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ராஜஸ்தான் : காங்கிரஸை பின்னுக்கு தள்ளிய பாஜக... !
இந்நிலையில், மிக்ஜாம் புயல் உருவானதை தெரிவிக்கும் வகையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. அதன்படி சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி கடல் பகுதி சீற்றமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். புயல் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்க 46 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் முகாமிட்டுள்ளனர். 211 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.