அறநிலையத்துறையில் சிறுசிறு குறைகள் தென்பட்டால் கூட அரசின் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்.! அமைச்சர் சேகர்பாபு பேச்சு.! 

அறநிலையத்துறையில் சிறுசிறு குறைகள் தென்பட்டால் கூட அரசின் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்.! அமைச்சர் சேகர்பாபு பேச்சு.! 

இந்து அறநிலையத்துறை கீழ் இயங்கும் கோவில்களின் ஆவணங்கள் ஆறு மாதத்தில் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

இந்து அறநிலையதுறை கீழ் இயங்கும் கோவில்களின் உள்ள பத்திரங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு அவற்றை இந்து அறநிலையத்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,இந்து அறநிலையத்துறை கீழ் இயங்கும் கோவில்களில் உள்ள பத்திரங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு  இணையத்தில் பதிவேற்றும் பணி 6 மாதத்தில் நிறைவடையும் அதன் பிறகு பொதுமக்கள் இணையதளம் செயலிகள் மூலம் பார்வையிடலாம் என்றும், தமிழகம் முழுவதும் சுமார் 4 கோடி ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன என்றும் தெரிவித்தார்.  

கோவில் சொத்துக்கள் நிலங்கள் தங்கங்கள் ஆகிய அனைத்து விஷயங்களிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்து அறநிலையத் துறை செயல்பட்டு வருகிறது என்று கூறிய அவர், அறநிலையத்துறையில் சிறுசிறு குறைகள் தென்பட்டால் அதை அரசு கவனத்திற்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்..