திருத்தணி கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம்... இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்...
திருத்தணி கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று இந்து அறநிலயத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும் மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள், புதிய திட்டங்கள், வருவாய் அதிகரிப்பு மற்றும் கொள்கைக்கான ஆலோசனைகள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் விரிவுபடுத்தப்பட்ட தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கொள்கைகள் மற்றும் திட்டங்கள், மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை, நில உபயோகம், ஊரக மேம்பாட்டுத்துறை, நலவாழ்வு மற்றும் சமூக நலத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, குழு உறுப்பினர்கள் பேராசிரியர் இராம. சீனுவாசன், பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு. தீனபந்து (ஓய்வு), சட்டமன்ற அமைச்சர் டி. ஆர்.பி. ராஜா, திருமதி மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையும் படிக்க | உள்துறை செயலாளருக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு..!
அவதூறு பேச்சுக்கு 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் 2 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என சீமானுக்கு, வீரலட்சுமி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 15 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில், ரூ.2 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது என்று வீரலட்சுமி, சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அப்போது தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக செயல்பட்டார். இதையடுத்து சீமானை வீரலட்சுமி கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான புகாரை திரும்ப பெற்றார்.
இதைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் காலில் சீமான் விழுந்து சமரசம் செய்து கொண்டதாகவும் தன்னிடம் உள்ள படையை திரட்டி வந்தால் நாம் தமிழர் கட்சியால் வட தமிழகத்தில் கால் வைக்க முடியாது என்றும் வீரலட்சுமி சீமானுக்கு சவால் விடுத்தார். தன் மீது அவதூறாக பேசிய வீரலட்சுமி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற சீமான் பேச்சுக்கு, சீமான் தான் தன்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வீரலட்சுமி கூறினார். மேலும், சீமான், வீரலட்சுமி தமிழர் இல்லை பேசினார்.
இந்நிலையில், அவதூறு பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு மற்றும் 2 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என வீரலட்சுமி அவரது வழக்கறிஞர் மூலம் சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதையும் படிக்க | உள்துறை செயலாளருக்கு ரூ.10,000 அபராதம் விதிப்பு..!
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற காலதாமதம் செய்ததாக உள்துறை செயலாளர் அமுதாவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடரப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட சிறப்பு நீதிமன்ற உத்தரவை உடனே நிறைவேற்றக் கோரி சிறுமியின் தாய் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற இவ்வளவு கால தாமதம் ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகையுடன் 5 சதவீதம் வட்டியும், வழக்கிற்கான செலவையும் சேர்த்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தகுதியுள்ள மகளிருக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் தமிழக அரசு மூலம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது . இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை கிராமத்தை சேர்ந்த பகுதி பெண்களுக்கு உரிமை தொகை சரியாக கிடைக்கப்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
இதில் விண்ணப்பம் செய்த பெண்களில் நிராகரிப்பு செய்த விண்ணப்பங்கள் அரசு அறிவித்தது போல் மீண்டும் விண்ணப்பம் செய்ய வேண்டுமென தெரிவித்து இருந்தது . இதன் அடிப்படையில் பலரும் தங்களது மறுபதிவு விண்ணப்பங்களை செலுத்தி வரும் நிலையில் கொடைக்கானலில் மலை கிராமப் பகுதி பெண்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர் .
குறிப்பாக இ-சேவை மையங்கள் மேல் மலை மற்றும் கீழ் மலைப்பகுதிகளில் முறையாக செயல்படாமல் இருந்து வருவதால் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தை மட்டுமே அவர்கள் நாடும் நிலை இருந்து வருகிறது . இவ்வாறாக வரும் நிலையில் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையானது ஏற்பட்டுள்ளது.
மேலும், பதிவு செய்யும் இடத்தில் ஒரு நபர் மட்டுமே பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருவதாலும் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது . இதனால் வயதானவர்கள் முதல் பெரும்பாலானோர் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது .
மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு விண்ணப்பம் மறுப்பதிவு செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது . எனவே மறுபதிவு செய்ய பெண்களுக்கு கூடுதலாக முகாம்கள் நடத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதையும் படிக்க | ”உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும்” - துரைமுருகன்
அக்டோபர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைத்து சாலைகளையும் முதல்வர் நேரடியாக ஆய்வு செய்ய உள்ளதால் அதிகாரிகள் சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியிலுள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பொதுப்பணிகள் , நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,. கடந்த 19-ஆம் தேதி முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மழைக்காலத்திற்கு முன்பு சாலைப்பணிகள் முடிக்கவேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தெரிவித்ததாவது:-
“நெடுஞ்சாலைகளில் மின்சார கம்பி வடங்கள், குடிநீர் குழாய்கள் பதிப்பதை விரைந்து முடித்து சாலைப்பணிகளை முடிக்கவேண்டும் என்றும், அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவித்திருப்பதாக கூறினார்.
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு பணிகள் விரைவாக நடைபெற்றுள்ளதாகவும், அதிகளவில் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுப்பதினால் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதாகவும் கூறினார். அதனால் பணிகள் சிறப்பாகவும் விரைவாகவும் நடைபெறுகிறது எனக் கூறினார்.
மேலும், “நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் பள்ளங்கள் பழுது ஏற்பட்டால் அதனைத்தெரிவித்தால் உடனடியாக சரிசெய்வதற்கு செயலி ஒன்றை தயார் செய்வோம் என்று சட்டமன்றத்தில் தெரிவித்தோம்”, அதன்படி இச்செயலி மூலமாக படங்கள் எடுத்து அனுப்புவதன் மூலம் குறிப்பிட்ட கால அளவிற்குள் புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும்”,எனத் தெரிவித்தார்.
மேலும், “பத்திரிக்கைகளில் முடிவுற்ற பணிகள், சிறு சிறு புகார்கள் குறித்தும் தவறாக செய்தி வெளியாகியுள்ளது. நானே நேரடியாக இது குறித்து பத்திரிக்கை அலுவலங்களில் பேசியுள்ளேன். இதற்கெல்லாம் முடிவுக்கட்டும் விதமாக இச்செயலி இருக்கும். ஐஐடி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இச்செயலி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதேபோல் மழைக்காலத்திற்கு முன்பாக பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம்”,என்றார் .
இந்த ஆலோசனை கூட்டத்தில் துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிக்க | "ரயில் இயக்கத்தை தடுத்தால் 4 ஆண்டு சிறை" மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை!