நடிகையை ஏமாற்றி குடும்பம் நடத்திய முன்னாள் அமைச்சர் மணிகண்டன்... ஆபாச வீடியோ, போட்டோ எடுத்து மிரட்டல்!!

நடிகையை ஏமாற்றி குடும்பம் நடத்திய முன்னாள் அமைச்சர் மணிகண்டன்... ஆபாச வீடியோ, போட்டோ எடுத்து மிரட்டல்!!

தன்னை திருமணம் செய்வதாக கூறி, பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்துவிட்டு, தன்னை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை நடிகை வலியுறுத்தியுள்ளார்.

சேலத்தை சேர்ந்த நடிகை சாந்தினி. இவருக்கும் அதிமுகவின் முன்னாள் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான மணிகண்டனுக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. 

இந்தநிலையில் இன்று அதிரடியாக செய்தியாளர்களை சந்தித்த சாந்தினி, தன்னை முன்னாள் அமைச்சரான மணிகண்டன் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து தொடர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது 5 ஆண்டுகள் தொடர்பில் இருந்தபோது, ஆபாச புகைப்படங்களை அவர் எடுத்து வைத்திருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மணிகண்டன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, புகைப்படங்களை காட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும் கூறுகிறார். எனவே தனது தொடர்பான அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் அழிக்க வேண்டும் என்பதோடு, அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.