கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீரென இடி மின்னலுடன் மழை….

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கன்னிப்பூ சாகுபடிக்கு பேச்சிப்பாறை அணை திறக்க உள்ள நிலையில் நேற்று இரவு பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீரென இடி மின்னலுடன் மழை….

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டு தோறும்  ஜூன், ஜூலை  மாதங்களில் தென்மேற்கு மழை பெய்யும் வழக்கம் உண்டு.  அதையொட்டி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நேற்று இரவு திடீரென கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. ஏற்கனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில் நேற்றிரவு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சிறு சிறு இடைவெளியுடன் பெய்த மழையை தொடர்ந்து, குமரி மாவட்டம் மீண்டும் குளிரான காலநிலைக்கு  மாறியது. தற்போது,  விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடிக்கு தயாராகி வரும் நிலையில், இந்த மழையை விவசாயிகள் மகிழ்ச்சியோடு வரவேற்கும் வகையில் காணப்படுகின்றனர்.