தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. உங்க ஏரியாவும் இருக்கலாம்..!

வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. உங்க ஏரியாவும் இருக்கலாம்..!

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும்  வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இடி மின்னலுடன்:

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. 

14 மாவட்டங்கள்:

மேலும், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மிதமான மழை:

சென்னையை பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மேலும், ஆந்திர கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய  வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.