16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...

தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை எதிரொலி

16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது . இந்நிலையில் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், தேனி, தென்காசி, பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல் நாகை, மதுரை உட்பட 16 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.