கனமழை எச்சரிக்கை..கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

ஒசூர் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் கொளதாசபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முழங்கால் அளவு நீர் தேக்கம்..!

கனமழை எச்சரிக்கை..கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

தமிழகத்தில் கனமழை காரணமாக நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெள்ளத்தை கட்டுக்குள் கொண்டு வர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்றும் நாளையும் தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதேபோல் தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஒசூர் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் கொளதாசபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியது. இதனால் மாணவர்கள் அவதி அடைந்தனர். 

திண்டுக்கல் மாவட்டத்திலும், பழனி பாலாறு பொருந்தலாறு அணை, தொடர் மழையால் நிரம்பியது. சண்முகநதி ஆற்றில் தண்ணீர் திறக்கவுள்ளதால் பொதுப்பணித்துறை சார்பில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சண்முகநதி ஆற்றின் கரையோரத்தில் விவசாயிகள் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்குவிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.