சென்னையில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை... இரவில் இடிமின்னலுடன் வெளுத்து வாங்கியது...

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த கனமழை

சென்னையில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை... இரவில் இடிமின்னலுடன் வெளுத்து வாங்கியது...

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.  இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

கிண்டி, அடையாறு, வடபழனி, கோடம்பாக்கம், உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும், நுங்கம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கொட்டிவாக்கம், மயிலாப்பூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. விடிய விடிய கொட்டித்தீர்க்கும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.