இன்று கனமழைக்கு வாய்ப்பு...இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

இன்று கனமழைக்கு வாய்ப்பு...இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் வரும் 7 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, 8 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை மத்திய வங்கக்கடலில் வடக்கு நோக்கி நகரும் போது அது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்...!

இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.