தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை..3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகும் புயல்..!

தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கும் கனமழை..3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

கிழக்கு வங்கக்கடலில் உருவான புயல்:

கடந்த 19ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் 24ம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகும் என முன்னதாக எச்சரிக்கப்பட்டது. 

26 மாவட்டங்களில் மழை:

இதைத் தொடர்ந்து இன்று 26 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஈரோடு, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்களில் அதிகாலை முதலே கனமழை கொட்டித் தீர்த்தது. 

பள்ளிகளுக்கு விடுமுறை:

சென்னையிலும் கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் மழை பாதிப்பையொட்டி திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளிலும், மயிலாடுதுறை மற்றும் தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.