அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு... ஐகோர்ட்டில் இன்று விசாரணை...

அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு... ஐகோர்ட்டில் இன்று விசாரணை...

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான உட்கட்சி தேர்தல், இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், வேட்புமனு திரும்ப பெறும் நாளான நேற்று, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது வேட்புமனுக்களை தவிர பிற மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதனிடையே, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்க தடை விதிக்க கோரி, ஓசூரை சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினர் ஜெயச்சந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.