ஏடிஎம்மில் கொள்ளை.. வடமாநில கும்பலை பிடிக்க தனிப்படை ஹரியானா விரைந்தது... சென்னை காவல் ஆணையர் பேட்டி...

எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்மில்  48 லட்சம் ரூபாய்  நூதனமுறையில்  கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்  வட மாநில கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை ஹரியானா விரைந்துள்ளது.

ஏடிஎம்மில்  கொள்ளை.. வடமாநில கும்பலை பிடிக்க தனிப்படை ஹரியானா விரைந்தது... சென்னை காவல் ஆணையர் பேட்டி...
எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் நூதன திருட்டு எதிரொலியாக  சென்னை காவல் ஆணையர் மற்றும் எஸ்.பி.ஐ சென்னை மண்டல முதன்மை பொது மேலாளர் கூட்டாக செய்தியாளர் சந்தித்தனர். அப்போது  திருட்டு நடந்தது பற்றி  விளக்கம் அளித்தனர். மேலும் வெளிமாநில திருடர்கள் தமிழகத்திற்கு வந்து கைவரிசை காட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.
 
சுமார் 48 லட்சம் ரூபாய் வரை எஸ்பிஐ வங்கியில் இருந்து  கொள்ளையடிக்கப்பட்டதாகவும் இனிமேல் இயந்திரத்தில் இருந்து பணம்  திருட முடியாதபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  தெரிவித்தார். வட மாநில கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை ஹரியானா விரைந்துள்ளதாகவும் சங்கர் ஜிவால் கூறினார்.
 
பொதுமக்களின் பணம் கொள்ளை அடிக்கப்படவில்லை என்றும்  இது முழுக்க முழுக்க வங்கியின் பணம்  என்றும் எஸ்.பி.ஐ சென்னை மண்டல  முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பொதுமக்கள் பாதிப்படையவில்லை என்றும்  அவர்  விளக்கம் அளித்தார்.