எந்த எந்த ஊர்களில் பேருந்துகள் இயங்கும்..? விவரம் உள்ளே!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் விதிமுறைகளுடன் பேருந்துகள் இயக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

எந்த எந்த ஊர்களில் பேருந்துகள் இயங்கும்..? விவரம் உள்ளே!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் விதிமுறைகளுடன் பேருந்துகள் இயக்கப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிபடியாக குறைந்து வரும் நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டிருக்கிறது.  பாதிப்பு மற்றும் தொற்று எண்ணிக்கையை வைத்து தளர்வுகள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை உள்ளிட்ட  4 மாவட்டங்களில் மட்டும் விதிமுறைகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர்சாதன வசதி இல்லாமலும், 50சதவீத  இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.  இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கிடையேயும் பொது போக்குவரத்து வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயக்கப்படும் என போக்குவரத்து  கழகம் அறிவித் துள்ளது..

அதேபோல் மெட்ரோ ரயில்களிலும் 50 விழுக்காடு  இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் 50 விழுக்காடு  பயணிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதற்கட்டமாக இன்று  முதல் காலை 6.30 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்றும்  பின்னர் தேவைக்கேற்ப நேரம் மாற்றம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது..