அதிகரிக்கும் வெப்ப அலை...எதிர்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை!

அதிகரிக்கும் வெப்ப அலை...எதிர்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை!

தமிழ்நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இனி வரும் காலங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் அதை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

இதையும் படிக்க : வரும் 17 ஆம் தேதி...உடல் பரிசோதனை மருத்துவ முகாமை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

அதன்படி, வெப்ப நிலை அதிகரிக்கும் நேரமான 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் அதிகம் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்பதால், மக்கள் உடல் சூட்டை தணிக்கும் வகையிலான உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.