
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில், சென்னை மாநகரை தூய்மையாக்கவும்,அழகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை மாநகரில் உள்ள சுவரொட்டிகள் முழுவதும் அகற்றப்பட்டு விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருவதோடு, பூங்காக்கள், ஏரிகள் புணரமைக்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 25,783 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காற்று மாசு, ஒலி மாசு குறைவதோடு, இரண்டரை மடங்கு, கூடுதல் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்றும், சுற்றுவட்டார பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.