தமிழகம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம்... அந்தந்த ஊராட்சிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்...

உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் ஊராட்சிகள் தவிா்த்து, மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் காந்தி ஜயந்தி தினமான இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டம்... அந்தந்த ஊராட்சிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்...

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள கிராம ஊராட்சிகள் தவிர மற்று ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவா்கள் செய்து கொள்ள வேண்டும் என்றும், கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை உறுதிப்படுத்த கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஊராட்சி நிதி செலவினம், கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள், மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும்திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.