டாஸ்மாக் மூலம் மட்டுமே அரசு நடைபெறவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

டாஸ்மாக் மூலம் மட்டுமே அரசு நடைபெறவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

டாஸ்மாக் மூலம் மட்டுமே அரசு நிர்வாகம் இயங்கி வருவதாக தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று  நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், டாஸ்மாக் கடைகளில் அதிகம் மதுபானங்கள் வாங்குவோரின் குடும்பங்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிக்க : நடிகர் அஜித்தின் தந்தை மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மூலம் மட்டுமே தமிழ்நாடு அரசு நிர்வாகம் இயங்கி வருவது போன்று தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறியவர், தமிழ்நாட்டில் மட்டுமே மதுபானக் கடைகள் இருப்பது போல உறுப்பினர் பேசுவதாக குறிப்பிட்டு, தமிழ்நாட்டை விட உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் முதன்மையான வருமானமே மதுக்கடைகள் மூலம் தான் கிடைப்பதாக குற்றம் சாட்டினார்.