ஆளுநர் சர்ச்சை: குடியரசு தலைவரிடம் மனு வழங்கிய அரசு பிரதிநிதிகள்...!

ஆளுநர் சர்ச்சை: குடியரசு தலைவரிடம் மனு வழங்கிய அரசு பிரதிநிதிகள்...!

ஆளுநர் ஆர்.என் ரவி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சீலிட்ட கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் வழங்கினர்.

ஆளுநர் சர்ச்சை :

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை வாசிக்கும் போது குறிப்பிட்ட தலைவர்களின் பெயரை நீக்கிவிட்டு வாசித்தார். இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஆளுநர் உரையை முழுமையாக வாசிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். 

இதையும் படிக்க: சேது சமுத்திர திட்டம்...தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு...ஆதரவு தெரிவித்த தலைவர்கள் யார் யார்?

இதையடுத்து ஆளுநர் உரைக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து ஆளுநர் உரை அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

குடியரசு தலைவரிடம் மனு அளிப்பு :

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது நடைபெற்ற விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை  சந்தித்து மனு அளித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு, குடியரசு தலைவரிடம் ஆளுநரின் செயல்பாடு குறித்து விளக்கியதாக தெரிவித்தார். மேலும் மாநில அரசின் உரிமைகள் மீது அதிகாரம் செலுத்தும் ஆளுநர்கள் குறித்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக குரல் எழுப்பும் எனவும் தெரிவித்தார்.