தமிழ்நாடு மீது அக்கறை இல்லாத ஆளுநர்..... தேநீர் விருந்து புறக்கணிப்பு!!!

தமிழ்நாடு மீது அக்கறை இல்லாத ஆளுநர்..... தேநீர் விருந்து புறக்கணிப்பு!!!
Published on
Updated on
1 min read

குடியரசு தினத்தில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தை கட்சி அறிவிப்பு. 

ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழாவில் ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சியினருக்கும் தேநீர் விருந்து அளிப்பது மரபு.  இந்நிலையில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விடுதலை சிறுத்தை கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ”அழைப்பிதழில் தமிழ்நாடு என அச்சிட்டாலும் கொள்கை அடிப்படையில் மாறிவிட்டார் என நம்புவதற்கு இடமில்லை” என தெரிவித்த தொல். திருமாவளவன் ”இருபதுக்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் வழங்காமல் தமிழ்நாடு மக்கள் மீதான அக்கறை இல்லாத ஆளுநர் அளிக்கும் குடியரசு தின தேநீர் விருந்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்காது” எனக் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com