
தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நான்கு நாள் சுற்றுபயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு குடும்பத்தினருடன் வருகை புரிந்துள்ளார். கடந்து இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களான அப்பர்பவானி, அரசு தாவரவியல் பூங்கா ஆகியவற்றை கண்டு ரசித்தார்.
ஆளுநர் வருகை காரணமாக 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் உதகை குன்னூர் இடையே டீசல் இன்ஜின் பொருத்திய மலை ரயிலில் ஆளுநர் பயணம் மேற்கொண்டார் .
குன்னூர ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் சாலை மார்கமாக மீண்டும் குன்னூரிலிருந்து ஊட்டி புறப்பட்டு சென்றார்.