"வள்ளலார் கூற்றும் சனாதனம் தான்" ஆளுநர் பேச்சு!

"வள்ளலார் கூற்றும் சனாதனம் தான்" ஆளுநர் பேச்சு!

சனாதனம் என்பது மரபு சார்ந்த பாரம்பரிய வழி எனவும், அது அனைத்து உயிர்களுக்கும் சமமாக விளங்குகிறது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29 வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் ஐந்து துறையில் இருந்து இளநிலை பிரிவில் 150 நபர்களும், முதுகலை பிரிவில் 145 மாணவ மாணவியர்கள் என மொத்தம் 296 மாணவ மாணவிகள் பட்டத்தை பெற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்லூரியில் புதிய ஆய்வக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அப்பொழுது பேசிய அவர், "சனாதனம் என்பது மரபு சார்ந்த பாரம்பரிய வழி அது. அனைத்து உயிர்களுக்கும் சமமாக விளங்குகிறது. அது ஒரு குடும்பம், தன்னைப் போலவே சமமாக நினைப்பது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் நானும் வாடினேன் என்று வள்ளலார் சொல்வதும் சனாதனம் தான்" எனப் பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "பாரதம் என்பது விஸ்வ குருவாக உள்ளது உலகிற்கு நண்பனாக என்பதை விளக்கும் ஜி 20 மாநாடு மூலம் நிரூபிக்கிறது. வானையும் கடலையும் அழைக்கும் அளவிற்கு தொழில்நுட்பத் துறையில் இந்தியா சிறந்த விளங்குவது பற்றியும், பொருளாதார முன்னேற்ற தொழில் துறை வளர்ச்சி நம் பாரத நாடு மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது" எனவும் தெரிவித்துள்ளார்.

மீ;ழும், தற்போது பட்டங்கள் பெற்றிருக்கும் பட்டதாரிகளில் பெண்கள் அதிகம் பட்டம் பெற்றிருக்கிறது பெருமிதமாக இருப்பதாகவும், மாணவர்கள் வளமான இந்தியாவை உருவாக்க பெரிய அளவில் கனவு காண வேண்டும் அதற்காக கடினமாக உழைக்க வேண்டும் என கூறினார்.