ஆர்.எஸ்.பாரதியின் கருத்துக்கு ஆளுநர் கண்டனம்...!

நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பவர்கள் எனக்கூறிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, நாய்க்கறி உண்ணும் நாகாலாந்து மக்கள் ஆர்.என்.ரவியை ஓட ஓட விரட்டும்போது, அதைவிட மேலான தமிழ்நாட்டு மக்களும் ஆளுநரை விரட்டுவர் என குறிப்பிட்டார். இக்கருத்துக்கு தனது X தளத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க மக்கள் ஆர்வம்...!கடைவீதிகளில் குவியும் பொதுமக்கள்!!

துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்க நாகாலாந்து மக்களை நாய்க்கறி உண்பவர்கள் என இழிவுபடுத்துவது கேவலமானது என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் கருத்து தெரிவித்துள்ளதாகவும், மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை, ஆர்.எஸ்.பாரதி காயப்படுத்தக் கூடாது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.