ஆளுநர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்  : ஆனால் ஒரு சார்பில் கருத்து சொல்லக்கூடாது - நல்லக்கண்ணு

ஆளுநர் ஆர்.என் ரவி மாநில அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும். மாநில அரசை தனிமைப்படுத்தி விட்டு அவர் கருத்தை சொல்வது சரியல்ல.

ஆளுநர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்  : ஆனால் ஒரு சார்பில் கருத்து சொல்லக்கூடாது - நல்லக்கண்ணு

ஆளுநர் ஆர்.என். ரவி மாநில அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும் மாநில அரசை தனிமைப்படுத்தி விட்டு அவர் கருத்தை சொல்வது சரியல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு

சென்னை கே.கே. நகரில் டிஸ்கவரி புக் பேலஸ் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு,

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்ததில்லை. ஆனால் தற்போது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் படிப்பு குறைந்துவிட்டது என்றார். ஆனால் அதிகரித்து இருக்கிறது. நாங்கள் புத்தகத்தை உருவாக்கி வருகிறோம். முந்தைய காலத்தை விட விற்பனை அதிகமாகி இருக்கிறது. கருத்துக்களும் மக்களை அதிகமாக ஈர்த்துள்ளது இளைஞர்களும் படிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எந்த நூலை படிக்க வேண்டும் என்று அவர்களே அறிகிறார்கள்  என்று கூறினார்.

டிஸ்கவரி

எந்த நூலை எந்த அறிவை பெற வேண்டும் என்பதிலும் ஆர்வம் இருக்கிறது. எனக்கு டிஸ்கவரி என்றவுடன் நினைவிற்கு வந்தது சுதந்திரத்திற்கு முன்னால் டிஸ்கவரி ஆப் இந்தியா என நேரு புத்தகம் எழுதியிருக்கிறார். நான் இங்கு வருவதற்கு முன்பாக அந்த புத்தகத்தை படித்துவிட்டு டிஸ்கவரி என்று நிலையத்திற்கு டிஸ்கவரி ஆப் புத்தகம் என்று பெயர் வைப்பது பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர் சொக்கலிங்கம் அவர்களின் பேரன் இந்த விழாவில் கலந்து கொண்டது எனக்கு பெரு மகிழ்ச்சி. படிப்பறிவு நூலகம் வைத்திருப்பவர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் ஊக்கம் கொடுக்க வேண்டும், அதிக நூல்களை வெளியிடுவதற்கு ஆக்கம் கொடுக்க வேண்டும். ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் எல்லா மாவட்டங்களிலும் நூல்களை விற்பனை செய்து அதிகப்படுத்துவதற்கும் அரசு உதவி செய்ய வேண்டும் துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். படிப்பவர்களும் மேலும் படிக்க ஆர்வம் காட்ட வேண்டும் என கூறினார்.

ஆளுநரை சந்தித்து ரஜினிகாந்த் அரசியல் பேசியிருக்கிறார் இது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த நல்லக்கண்ணு,

ஆளுநரை யார் வேண்டுமானாலும் சந்தித்து அரசியல் பேசலாம் ஆனால் ஆளுநர் ஒரு சார்பில் கருத்தை சொல்ல கூடாது, ஆளுநரை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் அவர்கள் எந்த முறையில் சந்தித்து பேசுகிறார்கள் என்பது தான் முக்கியம் என்று கூறிய அவர் ஆளுநர் ஆர்.என். ரவி மாநில அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும் மாநில அரசை தனிமைப்படுத்தி விட்டு அவர் கருத்தை சொல்வது சரியல்ல என்றும் கூறினார்.